பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம்
கணிசமாக அதிகரித்துள்ளது!
பொங்கல் பண்டிகையையொட்டி மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வருவதையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. இது தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம்.
அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள்
அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. வழக்கமாக பொங்கல் பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருக்கும். எனவே மக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளின் முன்பதிவு செய்து சொந்த ஊர்களுக்கு பயணம்
இவ்வாறு இருக்கும் நிலையில் பலரும் தனியார் பேருந்துகளின் முன்பதிவு செய்து சொந்த ஊர்களுக்கு செல்வது உண்டு. ஆனால் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலையானது உயர்ந்து காணப்படும். இது தொடர்பாக அரசு சார்பில் புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.