இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்





தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை “முத்தமிழன்” என்ற அடைமொழியுடன் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த சவேரியார் பாளையம் பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக திண்டுக்கல், தேனி, பெரியகுளம் ஆகிய ஊர்களில் இருந்து ருக்மான் அவர்களின் ஒருங்கிணைப்பில் தம்பி மருது செந்தூரான் தலைமையில் தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். உடன் வேளாங்கன்னி வழக்கறிஞர் யூஜின்.குமார், முகம்மது அலி ஜின்னா, அலெக்ஸ், சுமதி, ரகு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சோ.குமாரவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் பண்ருட்டி வேல்முருகன் தலைமையேற்று முத்தமிழன் வாழ்க என்ற கோஷத்துடன் கட்சியில் இணைந்துள்ளார்கள்.  

இது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சியிலும், சமூக அமைப்புகளில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் வேல்முருகன் தலைமையில் இணைந்து பணியாற்ற விரும்பி வந்து தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் உண்மையாக தமிழர்க-ளுக்காக குரல் கொடுக்கும் ஒரு தலைவராகவும், இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பில் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட கூடாது என்ற அளவில் உரக்க குரல் எழுப்புவதும், அரசிடம் உதவி கோரிக்கை வைப்பதும் வேல்முருகனின் அன்றாட நிகழ்வாக மாறி வருவதை காண்கின்ற இளைஞர்கள் வேல்முருகன் தலைமையை தேடி ஓடி வருகிறார்கள். 

குறிப்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இளைஞர் படைகளை அணி திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் வேல்முருகன். இதற்கு ஏற்றார் போல் இளைஞர்களும் இளம் பெண்களும் தமிழக வாழ்வுரிமை கட்சியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளார்கள். குறிப்பாக வெகு விரைவில் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாநாட்டை நடத்துவதற்கு ஆயத்தம் ஆகி வரும் பண்ருட்டி வேல்முருகன் அதற்கான பணியில் அதிக அக்கறை கொண்டு தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயண திட்டத்தை பகிர்ந்து திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். தனி ஒரு வேல்முருகனாக நின்று சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வரும் வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை கவர்ந்து இழுக்கின்ற அளவிற்கு தனது பேச்சாற்றல் மூலம் செயல்கள் மூலம் பல நிகழ்வுகளை நடத்தி வருவதுடன் இளைஞர் தமிழர்கள் விஷயத்திலும், தனது முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வருகிறார். 

இதனால் பல கட்சிகளில் இருந்து தினசரி இளைஞர்கள் இளம் பெண்கள் (பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அரசியல் கட்சிகளின் பெயரையும் அதிலிருந்து வெளியேறும் நிர்வாகிகளின் பெயரையும் வெளியீட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்) அந்தந்த கட்சிகளின் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேல்முருகன் தனது வாக்கு வங்கியை 10 முதல் 15 சதவிகிதம் வரை தனது வாக்கு வங்கியை உயர்த்தி ஆக வேண்டும் என்று அதி தீவிரமாக இளைஞர்களை அணி திரட்டுவதில் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருகின்றாராம்.

திமுக கூட்டணி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறீர்களே இதை திமுக தலைமை எப்படி பார்க்கும் என்று பண்ருட்டி வேல்முருகனிடம் கேட்ட பொழுது “நான் வலுவடைவதும் கூடவே தோழமையும் வலுடையும் என்பதால்” என்னுடைய வளர்ச்சியை தடுப்பதற்கு முன்வர மாட்டார்கள் என்று அதிரடியாக பதில் அளிக்கிறார் பண்ருட்டி வேல்முருகன். மேலும் பொதிய பொருளாதார வசதி இருக்குமானால் நடிகர் விஜய் கூட்டிய மாநாட்டை விட மிகப் பெரிய அளவில் இளைஞர்களை அழைத்து மாநாடு நடத்தி காட்ட முடியும் என்றும் சவால் விடுகிறார் பண்ருட்டி வேல்முருகன். பொறுத்திருந்து பார்ப்போம். எந்த வழியாகிலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற்றால் நாடு நல்வழி செல்லட்டுமே.   

- டெல்லிகுருஜி