கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள்
சந்திப்பு கூட்டம்




 கடலூர் துறைமுகம் ,ட்ரிபிள் எம் மண்டபத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் ,கழக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்,கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம் .ஆர் .கே .பன்னீர்செல்வம் அவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரை செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ,கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்களும், கடலூர், கிழக்கு மாவட்ட தி.மு.க பொருளாளர் எம் .ஆர் .கே கல்வி குழுமத்தின் தலைவர் எம் .ஆர் .கே பி கதிரவன் அவர்களும் வெள்ளி செங்கோல் வழங்கினார்கள். உடன் கழக இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அவர்களும், கடலூர் மாநகர செயலாளர் கே .எஸ். ராஜா அவர்களும்,மற்றும் கழக சார்புஅணிகளின் மாவட்ட அமைப்பாளர்களும் உடன் இருந்தனர்.