அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…



அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இடம் பெறும் என்ற செய்தியை வதந்தியாக வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் நபர் யார் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் நிதானமாக அரசியல் களத்தில் நின்று களமாட வேண்டிய இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடுவதும், தொண்டர்கள் மத்தியில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் விதத்திலும் செயல்படுவது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களிலும் விவாத பொருளாகி நடிகர் விஜய்யின் வளர்ச்சியை பின்னுக்-கு தள்ளுகின்ற அளவிற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக பேசுவது போல் நடித்துக் கொண்டு சிலர் விவாதத்தில் பங்கேற்பதும் தன் முடிவை தமிழக வெற்றிக் கழக முடிவாக நம்ப வைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்கம் தமிழக அரசியல் கட்சிகளின் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்தது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பு செய்தியை வெளியிட்டு 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற சூழலை உருவாக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் ஒருவிதமான தேக்க நிலையை உருவாக்கி உள்ளது. பொதுசெயலாளர் புஸ்லி ஆனந்த் அவர்களின் அறிக்கை. அதே போல் அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவரின் பேச்சுக்கள் பத்திரிகையாளர் சந்திப்புகள் அரசியல் விமர்சனங்கள், அனைத்தும் அதிமுக தனிமைப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது.

குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை விமர்சிப்பதை தவிர்த்து மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக கட்சியை அதிமுக ஐடி&வின் கடுமையாக சிமர்சனம் செய்ய வேண்டும் என்றுக கட்சியினருக்கு உத்தரவு இட்டு இருப்பது திமுகவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதிமுகவினருக்கு வருத்தத்தையும், ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்கும் தருணத்தில் கூட்டணி ஏற்படாமல் போனதற்கு அதிமுக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் ஜெயக்குமார் போன்றவர்கள் பேச்சு காரணமாகிவிடுகின்றது.

எதிரி யார் என்று தமிழக வெற்றிக் கழகம் திமுகவை அடையாளம் காட்சியுள்ளது. அதே நேரம் தனது எதிரியை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக கடந்த கால தோழமை கட்சியான பாஜக கட்சியை எதிரியாக பார்த்து அந்த கட்சியை பலகீனப்படுத்துவது போல் பேசுவது, விமர்சிப்பது எந்த வகையில் அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் கருத்தை தான் ஜெயக்குமார் அவர்கள் பொதுவெளியிலும் பத்திரிகையாளர் மத்தியிலும், செய்தி தொடர்பாளர் என்ற முறையில் பேசுவாரே ஆனால் அத்தகைய பேச்சும் செயல்களும், திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பலன் அளிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.