மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த
11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு
அலுவலர்கள் நியமனம்




இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , புதுக்கோட்டை, நாமக்கல், கோவை திருப்பூர், நாகப்பட்டினம் , தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.