சோதனையில் சுவடுகளில்வேதனைப் படாத மனிதர்..!டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி..
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் இல்லம் உள்பட அவரது தொழிற் கூடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை, மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்களும், பல பொய் செய்திகளும் வெளிவந்து கொண்டிருப்பதாக -கூறப்பட்டது. அப்பொழுது நம் நினைவுக்கு வந்தது, இந்த வரிகள் தான்…
என்ற திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் பல்வேறு விதமான தொழில்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, நட்சத்திர ஹோட்டல்கள், உயர் மருத்துவமனைகள் உள்பட ஆரம்ப கல்வி தொடங்கி, உயர்கல்வி வரை பல்வேறு விதமான தொழில்களில் முதலீடு செய்து தன் உழைப்பால் உயர்ந்து நிற்கிறார் டாக்டர் ஜெகத்ரட்சகன் என்பது உலகறிந்த விஷயம்.
விழுப்புரம் மாவட்டம் கலிங்க மலை என்ற கிராமத்தில் பிறந்து, அதற்கு பின் நகர வாழ்க்கைக்கு வந்தவர், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார். இவர் தனது வருவாயில் பெரும் பங்கை, நிலம் வாங்குவதில் முதலீடு செய்ததால் நிலத்தின் விலைகள் ஆயிரம் மடங்கு உயர்ந்து லட்சங்கள் பல லட்சமாக மாறி, கோடியாக உருவெடுத்தால் தொழில்துறையில் இவர் இன்று முன்னணி நிறுவனங்களுக்கு தலைவராக திகழ்ந்து வருகிறார். அதில் ஒன்று தான் ‘பாரத் பல்கலைக் கழகம்‘, ‘பாலாஜி மருத்துவ கல்லூரி’, ‘லஷ்மி ‘நாராயணா மருத்துவ கல்லூரி’, ‘ரேலா உயர்தர மருத்துவமனை’, ‘அக்கார்டு நட்சத்திர ஹோட்டல்’ உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தொழில் அதிபராக வலம் வருபவர் டாக்டர் ஜெகத்ரட்சகன்.
இவரது அரசியல் மற்றும் பொதுவாழ்க்கை என்பது மாணவர் பருவத்தில் இருந்தே மாணவர் திமுக என்கிற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்தவர். இது காலப்போக்கில் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பொழுது அந்த இயக்கத்தின் சார்பில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவிகளை வகித்தார். பிறகு எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் ஆர்.எம்.வீரப்பன் அவர்களோடு இணைந்து பயணித்த போது எம்.ஜி.ஆர் கழகம் என தொடங்கி, அந்த அமைப்பிற்கு பொதுச்செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றினார். அதன் பிறகு திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் தான் சார்ந்த சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு தொண்டாற்ற “விரும்பி வீர வன்னியர் பேரவை”, என்ற அமைப்பை தொடங்கி வன்னியர் மக்களை ஒருங்கிணைத்தார்.
பிற்காலத்தில் அந்த அமைப்பை ஜனநாயக முன்னேற்ற கழகமாக மாற்றினார். இந்த நிலையில் தான் மீண்டும் தான் நடத்தி வந்த இயக்கத்தை, திமுக கழகத்தோடு இணைத்து அந்த கட்சியின் சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று மத்திய அமைச்சரவையில் செய்தி ஒளிப்பரப்பு துறை, வர்த்தக துறை, நிதி துறை, போன்ற துறைகளில் இணை அமைச்சராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்பொழுதும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். திமுக கழக தலைவருக்கும், திமுக அமைச்சர்களுக்கு இவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் இவர் மீது மத்திய அரசின் நேரிடை பார்வையும், பல்வே-று தொழில் அதிபர்களின் பார்வையும் இவர் மீது நிழலாக தொடர்வது உண்டு.
இதனால் அடிக்கடி இவர் வீட்டிலும், இவரது தொழில் நிறுவனங்களிலும், வருமான துறை, அமலாக்கத் துறை, அடிக்கடி சோதனை நடத்துவது உண்டு. அந்த வகையில் கடந்த (2023&ம் ஆண்டு) அக்டோபர் மாதம் வருமான வரித்துறை, அமலாக்க துறை சோதனைகள் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவித ஆவணங்களும் பெரிய அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் உள்ளது. வழக்கமாக நன்கொடை வழங்குவதற்கும், அன்பளிப்பு தருவதற்கும், குறிப்பாக ஆன்மீக பணிகளுக்கும் அன்றாடம் வருவோர், போவோர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் வைத்திருந்த நிதியை தவிர பெரிய அளவில் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றியதாக தெரியவில்லை. வரி ஏய்ப்பு நடைபெற்றதாக தகவல்கள் வந்திருந்தாலும் சட்டப்படி அதை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளார் என்பதை மக்கள் அறிவார்கள்.
குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு திமுகவிற்கு சாதகமாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைக்கு தன்னை தயார்ப்படுத்தி திமுகவின் கட்சிப் பணம் இவரிடத்தில் இருக்கும் என்பதால் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் சிகரம் தொட்ட மனிதராக வளர்ந்து கொண்டிருப்பவர் என்பதால் அவரது புகழை சிதைக்கின்ற வகையிலும், அவரது உச்சத்தை தகர்க்கின்ற வகையிலும் பொய்யான தகவல்களின் அடிப்படையில் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன என்பதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஐந்து நாட்களாக சோதனை நடைபெற்று கொண்டிருந்த பொழுது அதிகாரிகள் அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்த போது, டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள், ஆழ்வார்கள் ஆய்வு மையத்திற்காக 150 பக்கத்திற்கு மேல் நாலாயிரம் திவ்ய பிரபந்தம், வைணவம் குறித்து பக்கம் பக்கமாக எழுதி வந்தாராம். சோதனை நடைபெற்ற பொழுது இல்லத்திற்கு அருகில் பல்வேறு தரப்பினர் குழுமி இருந்ததினால் ஐந்து நாட்களாக அவரது இல்லம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கதவுகள் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
காவல்துறையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வழக்கமாக அவரை பார்க்க வரும் பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காததினால் இல்லாதினால் அமைதியாக எழுதுவதற்கு நேரம் கிடைத்தது என்று தன்னை சந்திக்க வருபவரிடம் கூறினாராம் டாக்டர் ஜெகத்ரட்சகன்.
மக்கள் செல்வாக்கும் இறைவனின் அரு-ளும் இவருக்கு நிரந்தரமாக இருப்பதினால் எதையும் தாங்கும் இதயம் இருப்பவராக இருந்து வருகிறார். வடநாட்டு அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் வளர்ச்சியை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டின் இவரது வளர்ச்சி என்பது ஒரு பக்க கடிதத்தின் குறிப்பு மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ளலாம். அனைத்து கட்சியிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் எதிரிகள் இல்லை! திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவருக்காக வெளியிட்ட அறிக்கை ஆறுதலையும், நியாயத்தையும் எடுத்துரைத்தது.
- டெல்லிகுருஜி