டெல்லி காங்கிரஸ் மௌனம் கலைய வேண்டும்..!
கர்நாடக மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சித்தராமைய்யாவை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி மேலிடத்தின் மீது கோபமடைந்து தனது டெல்லி பயணத்தையே ஒத்திவைத்தார். இருந்தாலும் டெல்லியில் முகாமிட்டிருக்கும் சித்தராமைய்யாவுடன் சமரசம் செய்வதற்காக டி.கே.சிவகுமார் டெல்லிக்கு அழைக்கப்பட்டு அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் இன்னொருவர் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராடி வருகிறார். காங்கிரஸ் மேலிடம் தங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை விரைவாக அறிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சிக்குள் பல்வேறு விதமான கோஷ்டிகள் உருவாகுவதற்கும் அதன் மூலம் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு ஆட்சி அமைப்பதற்கே நெருக்கடி உருவாகுவதற்கும், வாய்ப்புகள் உருவாகும் நிலை தற்பொழுது கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நிலவி வருகிறது. விரைவில் சித்தராமைய்யா முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த முடிவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேரடியான பிளவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.