பருவகாலத்துக்கு முன்பே 28 சதவீதம் அதிக மழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுடெல்லி: இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது. நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் 18 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய கோடைகாலத்தில் இயல்பைவிட 28 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதேநேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 29 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்திருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் உருவாகும் அசாதாரணமான வெப்பமயமாதல் இந்திய வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.