அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
கடந்த ஆண்டு போல கலைக்கல்லலூரிகள் தொடங்க காலதாமதம் ஆவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் செயல்பாடுகள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே செயல்படு த்தப்பட்ட திட்டங்களையும், நிறுத்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். பொதுப்பணித்துறை மூலம் 135 கி.மீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலைநாட்கள் வழங்க உள்ளோம். மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி யுள்ளோம். கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற நிலையில் இருந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கியுள்ளோம். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்க உள்ளோம். மத்திய அரசு புதுவைக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம். பிரதமரிடம் நேரம் ஒதுக்கித்தர கோரியுள்ளோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.