ஓ.பி.எஸ். அணி சார்பில்
முப்பெரும் விழா மாநாடு




திருச்சி: திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியின் முப்பெரும் விழா மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழா எனும் முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடக்கிறது. மாலை 5 மணிக்கு லட்சுமன் ஸ்ருதி இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. மாநாட் டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசுகிறார். மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஐயப்பன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மாநாட்டு மேடைக்கு மாலை 6 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தருகிறார். தொடர்ந்து அவர் இரவு 7.30 மணிக்கு மேல் மாநாட்டு பேருரை ஆற்றுகிறார். இதில் அவர் முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும், இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக வட மாவட்டத்திலும், சென்னையிலும் அடுத்தடுத்து மாநாடு நடத்த முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.