4 மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றம்- ஜே.பி.நட்டா அதிரடி
புதுடெல்லி: ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்து உள்ளார். அதன்படி, ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்து வந்த சதீஷ் பூனியாவுக்கு பதில் சி.பி. ஜோஷியும், ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மோகண்டிக்கு பதில் மன்மோகன் சமாலும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவும், பீகார் மாநில தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வால் மாற்றப்பட்டு சம்ராத் சவுத்திரியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.