செப்டம்பர் மாதல் முதல் பெண்களுக்கு
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை



திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளப்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் அன்று வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று ஆவலோடு காத்திருந்த குடும்ப தலைவிகளுக்கு காலதாமதமாக தான் கிடைக்கும் என்பதும், அதுவும் தகுதியுடையவர்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் தான் வழங்கப்படும் என்பதும், எல்லா பெண்களுக்கு கிடைக்குமா என்பதும், ஒருவித ஏமாற்றமாகவே இருப்பதாக பெண்கள் பார்க்கிறார்கள். சர்க்கரை கார்டுகளுக்கு எந்தவித சலுகையும் இல்லை என்பது போல் ஒருவேளை இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட பெண்களுக்கு தான் வழங்கப்படும் என்பதால் ஏதோ தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்ற திருப்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை சாகாக்கள் ஆறுதல் அடையளாம். மொத்த மக்கள் தொகையில் எத்தனை பெண்கள் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள் என்பதை போகபோக தான் தெரிந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல அறிவிப்பு வெளியிட்டு 6 மாதங்கள் கழித்து தான் இந்த தொகை வழங்கப்படும் என்பது மேலும் பெண்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

- டெல்லிகுருஜி