தமிழ்நாடு பட்ஜெட்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிச்சம் தராத மின்மினி பூச்சி
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறினார். திமுக அரசின் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம், சொத்துவரி, பால்விலை உயர்வு, இதுபோல் பல வரி உயர்வுகள் இந்த அரசு உயர்த்தி உள்ளது. இதுதான் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் பரிசு. பொருளாதாரத்தை பெறுக்க பன்னாட்டு குழு என்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளது அதன் மூலம் எவ்வாறு வருவாய் அதிகரித்துள்ளது என்பதை திமுக அரசு சொல்லவில்லை. அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டு பட்ஜெட் அறிவிப்பு என்பது கடன் வாங்குகின்ற அளவிற்கு தான் உள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் கானல் நீர் தாகம் தீர்க்காது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராத மின்மினி பூச்சி பட்ஜெட்டாகும் என்று கூறினார்.
- டெல்லிகுருஜி