சசிகலா வழக்கு நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்படும்..! பொதுச்செயலாளர் பதவி தப்புமா..?



அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக செயல்படும் எடப்பாபடி பழனிசாமி பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற பரிசீலினையில் இருந்து வரும் நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் வாதம் எடப்பாடிக்கு எதிரான ஒரு நிலையை தோற்றிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகிறார்கள். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பொழுது குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை முதன் முதலில் நடைப்பெற்ற பொழுது பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் கையெழுத்திட்டு பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து போயஸ்கார்டன் இல்லத்திற்கு கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினார்கள். அதன் பிறகு சசிகலா பெங்களூர் நிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா தனது கையெழுத்து இல்லாமலேயே எவ்வாறு பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை தேர்வு செய்யப்பட்டது. கட்சி விதிகளில் திருத்தங்களை எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விகளை நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளார். மேலும் ஒற்றை தலைமை சசிகலாவிடம் இருந்த பொழுது இரட்டை தலைமையை அனுமதியின்றி தேர்ந்தெடுத்ததும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதும் செல்லுப்படியாகது என்ற கோரிக்கையையும் நீதிமன்றத்தின் முன் சசிகலா தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்துள்ளார்.

இதன்படி பார்த்தால் சசிகலா சிறையில் இருக்கும் பொழுது நடைப்பெற்ற இரண்டு பொதுக்குழு கூட்டங்கள் அதனை தொடர்ந்து நடைப்பெற்ற சட்ட திருத்தங்கள் எல்லாமே செல்லுப்படியாகாது என்பது போல் தனது தரப்பு வாதத்தினை சசிகலா நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். இதனால் சசிகலா சிறைக்கு சென்றப்பின் நடைப்பெற்ற இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் செல்லாது என்றும் அதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களும் ஏற்புடையது அல்ல இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததும், இடைக்கால ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தததும் செல்லுப்படியாக ஆகாமல் போனால் எடப்பாடியின் பதவியும், ஒ.பி.எஸ் சின் பதவியும் கூட பறிக்கப்படலாம். ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும் இரட்டை தலைமை தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் முடிவும் ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் சசிகலா அவர்களின் வாதம் நீதிமன்றத்தில் எடுப்படாமல் போகலாம். அதனால் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது சட்டப்படி சரி என்றும் கூறலாம்.

ஒட்டுமொத்த கருத்துக்களையும், வாதங்களையும் பார்க்கும் பொழுது தொண்டர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற விதியின்படி அதிமுக சட்டதிட்டம் கூறும் பொழுது மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை. ஆகவே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனது முயற்சியால் ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்குவதே எனது லட்சியம் என்று கூறும் சசிகலாவின் முயற்சியும் ஒன்றுப்பட்ட அதிமுகவின் இணைவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறிவரும் ஒ.பன்னீர்செல்வத்தின் கூற்றும் எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றுப்பட்ட அதிமுகவை மட்டுமே பாஜக கட்சி ஏற்றுக்கொள்ளும் என்ற நிலை உருவானால் எடப்பாடி நிலை என்னவாகும் என்ற நிலையும் கவனிக்க வேண்டிய தருணம் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகுவதற்கான வாய்ப்பு தற்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

- டெல்லிகுருஜி