நகராட்சி தலைவர்கள்-ஆணையர்கள் அலுவலக பயன்பாட்டுக்கு 187 புதிய ஜீப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 100 நகராட்சிகளுக்கு 187 புதிய ஜீப்புகள் வழங்கப்பட்டன. சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து இந்த ஜீப்புகளை தொடங்கி வைத்தார். இதற்கான சாவியையும் வழங்கினார். நகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர்கள் மற்றும் ஆணையர்கள், நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரது அலுவலக பயன்பாட்டுக்காக இந்த ஜீப்புகள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரத்து 63 செலவில் இந்த ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாக ஆணையாளர் பொன்னையா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்றனர்.