கிராம சபை கூட்டம் நடத்த ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்க தமிழக அரசு அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த இதுவரை ரூ.1000 செலவு செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது கிராமசபை கூட்டம் நடத்த ரூ.5000 வரை செலவு செய்ய ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமசபை, சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியில் இருந்து இந்த செலவுகளை செய்யலாம் என்று ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.