டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்...!
வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு 
வன்னியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது 



நாடாளுமன்ற தேர்தலில் எத்தகைய முடிவை அன்புமணி எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து அவருக்கும் பாமகவுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கூடுகிறதா? குறைகிறதா? என்பதை அறிய முடியும். வன்னியர் இளைஞர்களெல்லாம் தற்பொழுது மாற்று கட்சியை தேடி ஓடிக் கொண்டிருக்கிற நேரத்தில் அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு எந்த அளவிற்கு பலன் தரும் என்பது தெரியவில்லை. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் திராவிட கட்சிகளின் எதிர்மறை அரசியலில் பாமகவில் சாதி அரசியல் எடுப்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. இதனை அறிந்த இளைஞர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் அதிரடி அரசியலை பார்த்து வியந்து போய் அவரது பின்னால் அணிவகுத்து செல்வதற்கு வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை நன்றாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பாஜக கட்சி அண்ணாமலையை வைத்து தமிழ்நாட்டு அரசியலில் புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கு பலவித கோணங்களில் முயற்சி செய்து வருகிறது. அதிமுகவை மிஞ்சி தமிழ்நாட்டில் பாஜக கட்சி வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. அண்ணாமலை அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கின்ற நேரடி குற்றச்சாட்டிற்கு ஆளுங்கட்சியால் நேரடியாக பதில் சொல்ல இயலவில்லை. சுற்றிவளைத்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் கூடும் பதில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து வருகிறது. அதே நேரம் திமுகவின் ஆட்சியின் செயல்பாடுகள் மக்கள் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை தோற்றுவிப்பதோடு திமுகவினர் அண்ணாமலையின் கேள்விக்கு பதில் அளிப்பதில் தயங்குகிறார்கள் என்கின்ற அளவில் பொதுமக்கள் கண்ணோட்டம் பாஜக கட்சியின் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலை அன்றாடம் ஆளுங்கட்சியின் தவறுகளை அலசி ஆராய்ந்து மக்கள் மன்றத்தின் முன்னாள் ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

இதுபோன்ற செயல்களை அன்புமணி அவர்களால் செய்ய இயலாது என்கிறது ஒருபுறம் அப்படி செய்தால் உரிய வரவேற்பு கிடைக்காது என்பது மறுபுறம் காரணம் கடந்த காலங்களில் அதிமுகவின் அமைச்சர்கள், திமுக அமைச்சர்கள் என்று பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகை வரை சென்று தாக்கல் செய்தவர் அன்புமணி ராமதாஸ் என்பதால் அவரது சுற்றுப்பயணத்திற்கும் அவரது தலைமை பதவிக்கும் வன்னியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு அதிக அளவில் எதிர்பார்க்க முடியாது. தான் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று நினைக்கும் அவர் அதற்கு தகுந்தாற் போல் அரசியலில் தனது கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைப்பதில் அன்புமணிக்கு சில தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகலாம். ஆகவே அன்புமணியின் சுற்றுப்பயணம் அடுத்த தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- டெல்லிகுருஜி