திராவிடர்கள் யார்?
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார்..!



ஒரு காலத்தில் தமிழர் தந்தை என்றும் நாம் தமிழர் இயக்கம் நடத்தியவருமான வன்னியர் பெண்ணை மணந்தவருமான தினதந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சர் பதவியும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறுகிறார் அவர் தான் இப்படி கூறுகிறார். திராவிடர்கள் யார்? 

திராவிடர்கள் என்போர் தமிழர்கள் அல்ல..
ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம்
ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான
திரி - வடுகர்களே, “திராவிடர்கள்”
- சி.பா.ஆதித்தனார், நிறுவனர் தினத்தந்தி.        

திராவிடம், திராவிட மாடல், திராவிடர்கள், தமிழர்கள் என்று பேசுபவர்கள், தினதந்தியை பார்த்து தான் தமிழ் கற்றுக் கொண்டேன் என்று சொன்ன நடிகை, நடிகர்கள், அரசு அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், தமிழுக்காக தன் உயிரை ஈந்தவர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டும் விதமாக திராவிடர்கள் யார் என்ற துண்டு செய்தியை தமிழர்களின் கவனத்திற்கு வெளியிடப்படுகிறது. 

தமிழர் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் இப்படி கூறினாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.