சட்டி சுட்டதடா கையை விட்டதடா..? தேர்தல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர் புலம்பல்..!
தேர்தல் ஆலோசனை கருத்து மற்றும் கணிப்பு ஆலோசகராக பத்து ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்பொழுது பீகார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது புதிய திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களை சந்தித்து காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவதற்கு ஆலோசனையில் ஈடுபட்டார். உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் இவரது ஆலோசனை எடுபடாமல் போய்விட்டது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே போன்று சமாஜ்வாஜ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரசாந்த்கிஷோர் ஆலோசனையும் செயல்திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தலைவரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் செயற்குழுவும் ஏற்றுக்கொள்ள மறுத்து பிரசாந்த் கிஷோரை ஒதுக்கிவிட்டார்கள். இதில் விரக்தியடைந்த அவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக புரளியை கிளப்பிவிட்டார்.
ஆனால் புதிய கட்சியை தொடங்காமல் மக்களை சந்தித்து தன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதற்கு அவருக்கு சரியான வரவேற்பும், ஆதரவும், கிடைக்காத நிலையில் அடுத்தகட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கருத்துக்களை செய்தியாளர்களிடம் பரப்பி வருவதோடு பாஜக கட்சியையும் பிரதமர் மோடியையும் உயர்த்தி பிடித்து மீண்டும் இந்தியாவின் பாஜக கட்சி ஆட்சி மலரும் அப்படி மலர்ந்தால் 2024 முதல் 2034 வரை அந்த கட்சியின் ஆட்சி தொடரும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். மேற்குவங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பும் பெரும் தொகையும் தற்பொழுது எந்த மாநிலத்திலும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் தானே நேரடியாக களத்தில் இறங்கி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சியில் பிரசாந்த்கிஷோர் அவர்களுக்கு கை கொடுக்க போவதில்லை. மேலும் இனிமேல் பிரசாந்த்கிஷோர் ஆலோசனையை கேட்பதற்கு எந்த அரசியல் கட்சியும் தயார் இல்லை. வெகுவிரைவில் கருத்து கணிப்பில் பெரும் சரிவை சந்திக்கப் போகிறார் பிரசாந்த்கிஷோர். சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற பாடல் வரிகள் பிரசாந்த் கிஷோர் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்று சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும், பிரியங்காகாந்தியும் குஷியில் இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனையும், கருத்து கணிப்பும் எடுபடாது என்பதை உறுதியாக நம்பலாம்.
தற்பொழுது பிரசாந்த்கிஷோரின் நண்பராக இருந்து கருத்து கணிப்பு நடத்திய சுனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது ஆலோசனையும் தமிழ்நாட்டின் அதிமுகவின் தோல்வியும் காங்கிரசுக்கு வராமல் இருந்தால் நல்லது.