கொரோனா அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம்- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பு எனவும், சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.