பிரதமர் மோடி மூன்று நாள் பயணம்
ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்



ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு ஆமீரகத்திற்கு செல்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவிக்க உள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.