புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க சதி..! தோல்வியில் முடியும்..!



புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பல்வேறு வழிகளில் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார். இவருக்கு ஆதரவாக சிலர் திமுகவினர் இருந்து வருகிறார்கள். அதே போல் பாஜக கட்சியை சேர்ந்த ஒரு சிலரும் நாராயணசாமி அவர்களோடு ஆலோசனையை கேட்டு ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக பாஜக கட்சியை பொறுத்தவரை 6 சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேர் வன்னியர்கள். அதே போல் ரங்கசாமி கட்சியை சேர்ந்தவர்கள் பத்து பேரில் பாதி பேர் வன்னியர்கள். ஆகவே வன்னியர்கள் ஆட்சி நடைபெறுவதாக கருதி பல மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ரகசிய கூட்டம் நடத்தி ரங்கசாமி தலைமையில் ஆன கூட்டணி ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்குகின்ற வகையில் ரகசிய ஆலோசனைகளை நடத்தி வதந்திகளை பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் முயற்சி ஒரு காலத்திலும் எடுபடாது அல்லது தோல்வியில் முடியும் என்பது தான் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் கருத்தாக உள்ளது.

பதவியை ரங்கசாமி ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் ரங்கசாமியின் செல்வாக்கை பயன்படுத்தி தான் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களின் பேச்சை கேட்டதால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியையும் இழந்து ஆட்சியில் இருந்த ஒரு கட்சிக்கு இரண்டே இரண்டு கட்சிகள் மற்றும் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள் தவிர ஆனால் மற்றவர்கள் படுதோல்வியை சந்தித்து உள்ளார்கள். இது குறித்து காங்கிரஸ் அகில இந்திய தலைமை எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இன்னும் நாராயணசாமி அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் பார்வையாளர்களும், ஆலோசகர்களும் நாராயணசாமிக்கு சாதகமாகவே பேசிவிட்டு ஊர் சென்று விடுகிறார்கள். அதனால் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரும் சொந்த செல்வாக்கு இருப்பதால் தேர்தலில் அவர்களால் வெற்றிப் பெற முடிகிறது. அப்படி இருந்தும் சில அரசியல்வாதிகள் ரங்கசாமிக்கும், ரங்கசாமி ஆட்சிக்கும் எதிராக களகம் விளைவிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தோல்வியில் மட்டுமே முடியும் என்பதை உணர வேண்டும்.

- டெல்லிகுருஜி