மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை
சுற்றி பார்க்க பேட்டரி வாகனம்
சுற்றுலா பயணிகள் வரவேற்பு
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. தினந்தோறும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள புராதன சின்னங்களை நடந்து சென்று சுற்றிப்பார்ப்பதில் முதியோர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் பகுதிகளை முதியோர்கள், மாற்று திறனாளிகள் சுற்று பார்ப்பதற்கு வசதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது.
முதல்கட்டமாக கடற்கரை கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்கு 5 பேட்டரி வாகனங்கள் இன்னும் ஓரிரு வாரத்தில், இயக்கப்பட உள்ளது. இதற்கான போட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் சூரிய ஒளியால் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், பேட்டரியால் இயங்கக்கூடியது. இதை தயாரித்த பெங்களூரு நிறுவனம், தற்போது மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஓட்டிப்பார்த்து அதற்கான ஓட்டும் பயிற்சியும் கொடுத்து வருகிறது. பேட்டரி வாகன பயணத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.