இந்திய தடுப்பூசி
எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது போரிஸ் ஜான்சன் பாராட்டு
எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். நேற்று ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்தார். இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:
அருமையான பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளோம்.
இந்த வருகை எங்கள் உறவை ஆழப்படுத்தியுள்ளது. நான் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். எனக்கு நல்ல பலனை தந்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு மிக்க நன்றி.
போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.