முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தகவல்…!
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று பு0 மாதங்கள் கழித்து முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் முதல்வரின் மனைவி துர்கா மகன் உதயநிதி மகள் செந்தாமரை மருமகன் சபரிசன், கிருத்திகா மற்றும் மகன், மகள் வயிற்று பேரப்பிள்ளைகள் முதல்வரின் பயணத்தில் உடன் சென்றவர்கள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். மேலும் சில அரசு அதிகாரிகள் முதல்வரின் செயளர் என்று ஒரு பட்டாளம் தனி விமானத்தில் துபாய் சென்றடைந்தது. அதில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த முதல்வரை அரசுமுறை பயணம் என்பதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் உரிய மரியாதை விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளத.
துபாய் வாழ் தமிழகர்கள் இடத்தில் ஸ்டாலின் உரையாற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். உங்களில் ஒருவன் உங்கள் புதல்வர் என்று கூறி துபாய் வாழ் தமிழர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரங்கனாக விளங்கும் அரசு தமிழ்நாட்டில் வாழும் கழக அரசு என்றும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கழக அரசு முனைப்புடன் உள்ளது. அமீரக பயணம் வெற்றியை தந்துள்ளது. கடல் கடந்து சென்றேன். கைநிறைய புதிய ஒப்பந்தங்களுடன், முதலீடுகளையும் பெற்றேன் என்று கூறிய முதல்வர் உடன் சென்ற தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது, தனி விமானத்தின் முதல்வர் சென்றதற்கான ஏற்பாடு விமானம் கட்டணம் அனைத்தும் அரசு செலவு செய்யவில்லை. திமுக மொத்த செலவையும் செய்துள்ளது என்று கூறியுள்ளார். அரசுமுறை பயணம் என்று அறிவித்துவிட்டு பிறகு ஏன் கட்சி செலவு செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பிற்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் தோன்றுமே ஆனால் அதிலிருந்து தப்பித்து கொள்வதற்காக தான் இத்தகைய முறையை திமுக கையாண்டு இருக்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர்.
இதனை தொடர்ந்து தான் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் பொழுது “முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லவில்லை. மாறாக அவர்களின் குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்க அங்கு சென்றுள்ளார் என தெரியவருகிறது” என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தனது துபாய் பயணத்தை ஒரு குடும்ப சுற்றுலாவாக தான் மக்கள் பார்க்கிறார்கள். இதற்காக தனி பொயிங் விமானத்தை எடுத்து குடும்ப உறுப்பினர்களை துபாய்க்கு அழைத்து சென்றிருக்கிறார். முதல்வர் பயணத்திற்கு முன்பாகவே முதல்வர் மகன் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். பு.பு0.சு0சுபு சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கப்பட்டது. 3பு.03.சு0சுபு வர்த்தக கண்காட்சி நிறைவு பெறுகிறது கண்காட்சி நிறைவுபெறும் நாளில் முதல்வர் துபாய் சென்றதும் அங்கு தமிழ்நாட்டை அரங்கை பார்வையிட்டதும் ஏ-.ஆர்.ரகமான் இசை அரங்கிற்கு சென்று பார்த்ததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பில் சூதகமாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த பயணம் முதல் பயணம் என்றாலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பது முதல்வரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் உளவு-ப்பிரிவும் முதல்வர் பயணத்தை உற்றுநோக்கி இருப்பதால் மத்திய அரசு முதல்வரின் பயணத்தை எப்படி பார்க்கும் என்பதும் போக போக தான் தெரியும்.
- டெல்லிகுருஜி