முதுநிலை பயிலாமல் நேரடியாக பிஎச்.டி., படிப்பில் சேரும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்



பிஎச்.டி. பட்டப்படிப்பு படிக்க கட்டாயம் முதுநிலை முடித்திருக்க வேண்டும் என்பது இனிமேல் அவசியம் இல்லை என்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

முதுநிலை பயிலாமல் நேரடியாக பிஎச்.டி., படிப்பில் சேரும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி., படிக்க வேண்டுமென்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடிதிருக்க வேண்டும். இனிமேல் முதுநிலை படிக்காமல் பிஎச்.டி., படிக்கும் வகையில் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த இருக்கிறது.

மூன்று ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால பி.ஜி. படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும், படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.

4 ஆண்டு கால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் படிக்கலாம். தொலைதூரக் கல்வி வழியிலும் 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.