விடுதலை தியாகிகளை
நினைவில் கொள்ளாத மக்கள்!
அண்ணாவின் பெயரை
உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்…!
கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?
சி.என்.அண்ணாதுரை இறந்து 53 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் தமிழ்நாட்டில் அவர் ஆள்கிறார். அவரது கொள்கைப் படி தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறது என்பது தான் உண்மை. தமிழ்நாட்டை தாண்டியும் தென்னிந்திய மாநிலங்களிலும் பரவலாக பேசப்படுவதும் இதுதான். தமிழ்நாட்டின் நடப்பது அண்ணாவின் ஆட்சி 1969 ஆம் ஆண்டு பிப்.3 ஆம் தேதி சி.என்.அண்ணாதுரை இறந்தார். தான் ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்த அவர் தன் இனிய குடும்பத்திற்கு மட்டும் வறுமையை தந்தார் என்று திரைப்பட பாடல் மூலம் தெரிந்த போதிலும் அவரது மரணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியதோடு அவர் மரணத்தில் பங்கேற்ற பலர் ரயில் மூலம் சென்னை நோக்கி பயணித்த பொழுது ரயில்வே காரிடரில் அடிப்பட்டு மாண்டவர்களும் உண்டு.
ஆனால் தமிழ்நாடு தற்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருப்பதற்கு அண்ணாவின் தொலைநோக்கு பார்வை தான் காரணம் என்று வரலாற்று ஆய்வாளர்களும், விமர்சகர்களும் கூறினாலும், சுயமரியாதை, மாநில சுயாட்சி பேசிய அண்ணா திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திய அவர் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தினால் அந்த கோரிக்கையே கைவிட்டு விட்டார் என்பதும் கோரிக்கைக்கான காரணம் அப்படியே இருப்பது தான் என்று குறிப்பிட்டார். சுயமரியாதை திருணமத்திற்கு சட்ட அங்கீகாரம் மதராஸ் மகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இருமொழி கொள்கை இவைகள் அவர் ஆட்சியின் அடையாளமாக இன்றும் பேசப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தமிழக அரசியல் இருமொழி கொள்கையாக இருந்தாலும் இந்தியை எதிர்த்து அளவிற்கு ஆங்கிலேய மொழியான ஆங்கிலத்தை தமிழ்நாட்டை எவரும் எதிர்க்கவில்லை. அதே நேரம் தமிழையும், தமிழ்நாட்டின் ஆட்சி மொழி என்ற நடைமுறையும் இதுவரை செயல்வடிவம் தரமுடியவில்லை என்ற குறைப்பாடு இருந்தாலும் மும்மொழி கொள்கையை கடினமாக எதிர்த்துவந்தார். இந்திய மதசார்ப்பற்ற நாடு என்று அளிக்கப்பட்டாலும், ஆனால் இன்னும் மதத்தை பற்றி பேசிக் கொண்டு கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரம் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட இயக்கங்களால் பல பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாட்டு விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கன் போன்ற தேச தலைவர்களின் பெயர்கள் கூட இன்றைய தலைமுறையினர்களுக்கு நினைவில்லை என்ற அளவிற்கு கல்வியின் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் பொழுது வேதனை அடைவதா ஆறுதல் அடைவதா இதற்கு காரணமானவர் யார்? என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் வரலாற்றை எழுதியவர்களும், வரலாற்றை பாடமாக நடத்தியவர்களும் வரலாறாக வாழ்ந்தேன் என்று கூறியவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்க்காணல் நிகழ்ச்சியில் 20 வயது முதல் 40, 60 வயது உள்ளவர்கள் வரை கக்கன் யாரென்றெ தெரியாது என்றும் வ.உ.சி. என்றால் என்னவென்றும் விக்கிப்பீடியாவை பார்த்து வ.உ.சிப் தெரிந்து கொள்வது தான் திராவிட கொள்கை ஆட்சியையும் இன்னும் அண்ணாவின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும், திராவிடப் பாடல் அரசியல் சீந்தாந்தத்தை செயல்படுத்த போவதாக அறைகூவல் விடும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடுதலை தியாகிகளின் பெயர்களையும், அவர்கள் நாட்டின் ஆற்றுக்கின்ற தொண்டினையும் அவர்கள் புரிந்துக் கொள்கின்ற அளவிற்கும், அறிந்து, கொள்கின்ற அளவிற்கு நல்லதொரு பாடத்திட்டத்தையு-ம், பயிற்சி திட்டத்தையும் உருவாக்கி தருவோம் என்று நம்புவோம்.!
- டெல்லிகுருஜி