அதிமுகவை விரும்பும் அஜித்!
‘தல’ என்றால் நடிகர் அஜித் அடையாளத்தை குறிக்கும் சுருக்கெழுத்து. லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் அதிமுகவின் அனுதாபியாக தனது நண்பர்கள் இடத்தில் பேசு ம் போதெல்லாம் மனம் திறந்து பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் அல்லது அழைப்பு விடுத்தால் அவரது தலைமையில் அதிமுகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டிய நடிகர் அஜித் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவிற்கு எதிராகவும் பாஜக கட்சிக்கு ஆதரவாகவும் பேசப்பட்ட போதெல்லாம் தனது நிலைப்பாடு அதிமுகவிற்கு ஆதரவாகவே அஜித் தனது கருத்தை பொதுவெளியில் பதிவிட்டிருந்தாலும், எம்.ஜி.ஆர் மீது கொண்டு பற்றும், ஜெயலலிதா அவர்களின் துணிச்சலான முடிவும் நடிகர் அஜித்தின் அரசியல் ஆர்வத்திற்கு அடித்தளமாக இருந்தது. ஒருவேளை ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நலம் பெற்று போயஸ்கார்டன் இல்லத்திற்கு திரும்பி இருந்தால் அஜித்தின் விருப்பம் நிறைவேறியிருக்கலாம் என்கிறார்கள் பிரபல அதிமுக முக்கிய பிரமுகர்கள்.
- டெல்லிகுருஜி