நடிகை விஜயசாந்தி சசிகலா சந்திப்பு…!
அதிமுகவின் பொதுச்செயலாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சசிகலா அமமுகவின் நிலைக் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் பாஜக கட்சியை பகைத்து கொள்ளாமல் நட்பு பாராட்டி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். டெல்லி பாஜகவின் நிலை முற்றிலும் மாறுபட்டதாக இருந்து வருகிறது. சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றோ அல்லது சசிகலாவின் ஆதரவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றோ டெல்லி மேலிடம் எவரிடத்திலும் வழங்கவில்லை. ஆனாலும் பாஜகவின் நட்பை சசிகலா தொடர்ந்து விரும்புகிறார். என்றைக்காவது ஒரு நாள் பாஜக கட்சி எடப்பாடி ஒ.பன்னீர்செல்வத்தை நிர்ப்பந்தம் படுத்தி அதிமுகவில் தன்னை சேர்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சசிகலா. தன் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்கும் பாஜக கட்சியின் நட்பு நமக்கு கைகொடுக்கும் என்றும் நம்புகின்றாராம். இதன் வெளிப்பாடு தான் டெல்லியில் வரும் பாஜக முக்கிய பிரமுகர்கள் பாஜக கட்சியின் ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும் சென்னை வரும்பொழுது தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று பிரத்தியேக ஏற்பாடை செய்து வருகிறார் சசிகலா. அதன் தொடக்கம் தான் அதில் ஒரு அங்கமாக தான் நடிகை விஜயசாந்தியும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியது.
-டெல்லிகுருஜி