நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
குழப்பங்கள் நிறைந்த வேட்பாளர்கள்!



திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதாக கட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிருப்தியுடனும், குழப்பத்துடனும் எதிர்மறை முக்கோண வடிவில் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று சுயேட்சைகளாகவும், பிரதான கட்சிகளுக்கு எதிராகவும் தேர்தல் களத்தில் களம் காண்கிறார்கள். இது ஒருவகையில் ஆளுங்கட்சிக்கு ஆதாயமாகவும் எதிர்கட்சியான அதிமுகவிற்கு இழப்பையும் ஏற்படுத்தக் கூடும். அதே நேரம் தோழமை கட்சிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் திமுக மாவட்ட செயலாளர்களின் முரண்பாடுகள் தோழமை கட்சிகளின் முறையாக வழிநடத்தாமல் கேட்கும் இடங்களை ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழிப்பதுடன் மோதல் போக்கையும் கடைப்பிடித்து வருகிறது திமுக.

குறிப்பாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் போன்ற தோழமை கட்சிகளை கூட சமாதானம் படுத்துவதற்கு பதிலாக அவர்களை அவிழ்த்து விட்டு ஓரம் கட்டுகிற வேலையை திமுக மாவட்ட செயலாளர்கள் கணம் கட்சிதமாக செய்துக் கொண்டு மேலிடத்தில் நன்மைகளை பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்படப் போகின்ற இழப்பை எப்படி சரிகட்டுவது என்று நினைக்காமல் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று வியூகம் வகுக்காமல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்றும் உதயநிதி ஆதரவாளர்கள் என்றும், கனிமொழி ஆதரவாளர்கள் என்றும் ஏன் சபரிஸன் ஆதரவாளர்கள் என்றும் திமுக பல கோணங்களில் மக்கள் இடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற புகார்களை கண்டறிந்து குழப்பத்திற்கு காரணமானவர்களை களை எடுப்பாரா? அல்லது கவனிக்காமல் போனால் போகட்டும் என்று விடுவாரா? என்று உடன்பிறப்புகள் புலம்புகின்றன. இது போன்ற நிலை அதிமுகவிலும் நிலவுகின்றது. அதில் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் என்றும் இரு கோணங்களில் பிரிந்து கிடப்பதுடன் மேயர் பதவி, துணை மேயர் பதவி என்று கனவில் மிதந்து கொண்டிருக்கும் பல அதிமுகவினர் மாவட்ட செயலாளர்களின் தலையீட்டால் மிகப் பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் வாய்ப்புக்கு சீட் கேட்டு எதிர்பார்த்து காத்திருந்த பலரும் இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் அதிருப்தி அடைந்து மாவட்ட செயலாளர்களுடன் மோதல் போக்கை கையில் எடுத்துக் கொண்டு பல இடங்களில் சுயேட்சைகளாகவும் வேட்புமனு தாக்கல் செய்து அதிமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுகின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சொந்த செல்வாக்கு போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது வாக்குகளை சிதறப்படிப்பது வெற்றி வாய்ப்பை இழப்பது போன்ற உள்குத்து வேலைகளையும் அதிமுகவை சேர்நதவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய மாவட்ட செயலாளர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

தேர்தலில் யார் பணம் செலவு செய்வது என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும் என்று பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள் அதிமுகவினர். இதனால் பல இடங்களில் தோல்வியை தாங்களே ஏற்படுத்திக் கொள்கின்ற அளவிற்கு அதிமுக வேட்பாளர்கள் தர்மசங்கடமான சூழ்நிலையில் களம் காண்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட 35 இடங்களை சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துவிட்டு 165 இடங்களில் திமுக நேரிடையாக களம் காண்கிறது. பு-திதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஆவடி, தாம்பரம் திமுக கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளது.

பாஜக கட் சி, பாமக கட்சி, தேமுதிக, போன்ற கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் பல இடங்களில் திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை தானாகவே அமைந்துவிடுகிறது. சென்னையை பொறுத்தவரை திமுக உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், நகைக்கடன் தள்ளுப்படி போன்ற விஷயங்களை கையில் எடுத்து பொதுமக்கள் மத்தியில் கொண்டுச்சென்று வெற்றிப்பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கும் பட்சத்தில் போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் பல இடங்களில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருகட்சிகளிலும் இருந்து வருகிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குழப்பத்திற்கு தீர்வு கிடைக்குமா? குழப்பமே காரணமாக அமையுமா? என்பதை 22 ஆம் தேதி தேர்தல் முடிவு தெளிவாக பதில் அளிக்கும்.

- டெல்லிகுருஜி