நீட் தேர்வு சட்டம் ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்?



ஆளுநர் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய கோப்பு திருப்பி அனுப்பினாரா? அல்லது தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை எழுப்பி அதற்கு உரிய பதிலை தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு தன் வசம் இருந்த கோப்புகளை திருப்பி அனுப்பினாரா? இது குறித்து விளக்கமான அறிக்கையை தனது விளக்கத்துடன் ஆளுநர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு குறிப்பிடுகின்றது. மாநில அரசாங்கத்தின் தரப்பில் இருந்து எழுப்பப்படுகிற கேள்வி ஆளுநர் அனுப்பிய அறிக்கைக்கு பதில் கூறுவதை விட நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இருந்துக் கொண்டு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் கோப்பு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று மாநில அரசு தரப்பில் கூறப்பட்டாலும் ஆளுநர் அனுப்பிய விளக்கத்தில் எத்தகைய சந்தேகங்களை எழுப்பியுள்ளார் என்பதை மாநில அரசு இதுவரை தெளிவாக வெளியிடவில்லை.

தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் விவாதங்கள் நடந்துக் கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துவிட்டதாக குற்றம் சுமத்துவதுடன் ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவனர் எதற்கு என்று மறைந்த முதலமைச்சர் அண்ணா கூறியதை சுட்டிக் காட்டும் திமுக கழகத்தினர் 53 ஆண்டுகளாக அண்ணா மறைந்த பிறகும் 5, 6 முறை திமுக கைப்பற்றிய பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்களே தவிர திமுகவினர் நாடாளுமன்றத்தில் கோஷம் போடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து கூட தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மாநிலத்திற்கு ஆளநர் தேவையில்லை என்ற கோரிக்கை பயன்படுத்தி ஆளுநர் பதவியை ரத்து செய்வதற்கு ஏன் தயங்கினார்கள்.பாஜக கட்சியின் ஆதரவான சூர்ஜித்சிங் பர்லானா அவர்களை அவரது பதவி காலம் முடிவுற்றப் பிறகும் தங்களுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனிகாந்தியிடமும், பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கோரிக்கை வைத்து ஆளுநர் பர்னாலாவுக்கு பதவி நீட்டிப்பு பெற்று தந்தது திமுக தானே. இன்றைய ஆளுநர் ரவி அவர்கள் நீட் தேர்வு கொண்ட கோப்பு குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் சந்தேகங்களை எழுப்பி கோப்பு திருப்பி அனுப்பிவிட்டார் என்று மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதும் அனைத்து கட்சி சட்டமன்ற கூட்டத்தை முதலமைச்சர் தலைமையில் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவதும் மீண்டும் சட்டம் இயற்றி அதன் மூலம் நீட்டுக்கு விலக்கு பெற்று தரமுடியுமா என்பதையும், முதல்வரும் அனைத்து கட்சியினரும் நாட்டுமக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டு நீட்டுக்கு விலக்கு கேட்டு ஆளுநருக்கு அனுப்பிய கோப்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து குடியரசு தலைவரே அந்த கோப்பு திருப்பு அனுப்பிவிட்டார் என்பது குறிப்பித்தக்கது.

ஆகவே தற்போதைய ஆளுநர் ரவி அவர்கள் குடியரசு தலைவருக்கு இந்த கோப்பு அனுப்பி வைத்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்திருக்குமா என்பதையும், மீண்டும் அதே கோப்பு குடியரசு திருப்பி அனுப்பினால் என்ன நடந்திருக்கும் என்பதையும் முதல்வர் தலைமையில் நடந்திருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் இதில் பதிலளிக்க வேண்டும்.

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை உச்சநீதிமன்றம் தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர இதற்கு சட்ட வல்லுநர் தான் கூறவேண்டும். அல்லது நாடாளுமன்றம் மூலம் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். இந்த பிரச்சனையை சுற்றி வளைத்து மாணவர்களையும் பெற்றோர்களை குழப்புவதற்கு பதிலாக நேரடியாக மத்திய அரசை வற்புறுத்தி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மாநில அரசுக்கு வெற்றியை தரும். இல்லையென்றால் மாணவர்களுக்கு தொடர்ந்து வருத்தம் தான் வரும். இருந்தாலும் மாநில ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலந்து ஆலோசித்து மாநில மக்களின் நலனில் அக்கறையுடன் கருணையுடனும் சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் செய்யாமல் மாணவ மாணவிகள் எதிர்கால நன்மைக்காக முடிவெடுக்க வேண்டுமே தவிர கோப்பு திருப்பி அனுப்பி குழப்பத்தை விளைவிக்க கூடாது. குழப்பத்தை விளைவிக்க காரணமாக இருக்க கூடாது. ஆளுநர் தனது முடிவை மறுபரீசிலனை செய்து தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிப்பதற்கு தன்னால் ஆன முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு தனக்குள்ள முழுமையான அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். மாநில அரசும் ஆளுநரிடம் மோதல் போக்கை எடுத்து செல்லாமல் நட்புறவை வலுப்படுத்தி சட்ட நுணுக்களை எடுத்துக் கூறி மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை செலுத்தி நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆளுநரை குற்றவாளிப் போல் சித்தரிப்பது தேவையற்ற ஒன்று என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

- டெல்லிகுருஜி