உத்தர பிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் - 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

   



லக்னோ:

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இந்த 4-வது கட்ட தேர்தலில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.