முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுகிறார்!



“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” - என்று எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கேற்ப பொங்கல் பரிசு வழங்கிய திட்டத்தில் ஏற்பட்ட குளறுப்படிகள் குறித்தும் அதை எதிர்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வரும் மு.க.ஸ்டாலின் துறைரீதியாக விசாரணையை விசாரித்து விட்டு தவறும் செய்த அதிகாரிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் விடமாட்டேன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஊழல் நடந்ததற்கான ஆதரத்தை வெளியிட்டால் அதை நிரூபித்தால் தக்க பதிலடி தரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பொங்கல் தொகுப்பு வழங்கியதில் தரமற்ற பொருட்களும் ரூ.500 கோடிக்கு ஊழலும் நடைபெற்று உள்ளதாக அடித்து கூறுகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் சாட்டையை சுழற்றுகின்றார். நடக்கப்போவது என்ன? பொறுத்திருந்துப் பார்ப்போம்.    


- கண்ணன்