நகர்மன்ற தேர்தல்
அதிமுகவிற்கு ஆதரவாக சசிகலா
பிரச்சாரம் செய்வாரா..!
நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் சசிகலா அதிமுக இரட்டை இலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் தொண்டர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் தினகரன் கட்சி தொண்டர்கள் அதிலிருந்து விலகி நேரடியாக அதிமுகவில் சேரும் வாய்ப்பும் உருவாகலாம் என்பதால் சசிகலா அவர்களின் முடிவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிப்பெற்றால் அந்த வெற்றியின் மூலமாக அதிமுகவில் சேருவதற்கு வாய்ப்பாக அமையலாம் என்று சசிகலாவும் கணக்குப் போடலாம். இந்த முயற்சிக்கு டிடிவி தினகரன் முட்டுக்கட்டை போட நினைத்தால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சசிகலா பகிரங்கமாக எடுப்பதற்கும் தயங்கமாட்டாராம்.
- டெல்லிகுருஜி