கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல்!காங்கிரஸ் அபார வெற்றி!ஆளுங்கட்சியான பாஜக செல்வாக்கை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை ஆட்சியை கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றிய பாஜக கட்சி முதல்வராக எடியூரப்பாவை நியமித்தது. அவரது ஆட்சி ஓராண்டு கடந்தப் பின் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதிய முதல்வராக பொம்மையை நியமித்தது பாஜக கட்சி. இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் பாஜகவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. காங்கிரஸ் முதலிடத்தைப் பிடிப்பதற்காக கடுமையாக போராடி வெற்றிவாகை சூடிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் அவர்களை சாரும். இந்த பஞ்சாயத்து நகராட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை முன்னிறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.எஸ்.சிவகுமார் பாஜக ஆட்சிக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை இவரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினால் எதிர்கால காங்கிரஸ் வெற்றிக்கு துணை நிற்பார்.
எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதினால் பாஜக கட்சி இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்று கட்சி மேலிடத்திற்கு கர்நாடக பாஜக கட்சியினர் புகார் கடிதம் அனுப்பியுள்ளதோடு பசுவராஜ் பொம்மையை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்கள்.
- டெல்லிகுருஜி