ஊடகங்கள் ஊதி பெரிதாக்கிய அரசியலை ரஜினிகாந்த் தொலைத்தது ஏன்?அரசியலை தொலைத்து விட்ட ரஜினிகாந்த்!
திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து பல வகையிலும் நலமுடன் வாழ வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இன்றும் சூப்பர் ஸ்டாராக நின்று திரைப்படம் மூலம் தனது வருவாயை உயர்த்திக் கொண்டு வசதியான வாழ்க்கை வாழும் மனிதர் நடிகர் ரஜினிகாந்த். இவரது கடந்த கால வாழ்க்கை திரும்பி பார்த்தால் கர்நாடக மாநில பேருந்தில் நடத்துனராக தனது பணியை தொடங்கி நண்பர்களின் வாழ்த்துக்களால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைக்கப் பெற்று பிரபல இயக்குநரான பாலச்சந்திரர் அவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டு இன்றைக்கு திரையுலகில் மூடி சூடா மன்னனாக முதிர்ந்த வயதிலும் இளமையாக தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டு கதாநாயகன் அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளார். தன்னுடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் கூட தனக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று இன்றும் பல நடிகைகள் ரஜினிகாந்த்துடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது வரவேற்கதக்கதா அல்லது ஏற்க மறுக்கும் செய்தியா? என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
மறைந்த முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் இல்லாத நேரம் பார்த்து காலம் நேரம் பார்க்காமல் ஊடக செய்தியாளர்கள் செய்த விளம்பரத்தினால் பரபரப்பாக பேசப்பட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஜினிகாந்த் வருகிறார் வருகிறார் என்று ஆண்டுகணக்கில் ஆர்பறித்துக் கொண்டிருந்தது தமிழ்நாட்டு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் போல் அரசியலுக்கு வரமாட்டேன் என்று செய்தியாளர்களின் செவிப்பறை கிழிகின்ற அளவிற்கு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஆன்மீக அரசியலை ஈடுப்பட போகிறேன் என்று சொன்ன அல்லது சொல்ல வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது எந்த ஊடகமும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் ரஜினிகாந்த் குறித்து தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.
அண்ணாத்த திரைப்படம் மட்டும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு பரபரப்பான விளம்பரங்கள் கொடுத்தும் அண்ணாத்தப் பட வசூல் என்னாச்சு என்று கூட செய்திகள் வெளியிடப்படவில்லை. மழை வெள்ளம் குறித்த செய்திகளும் அது குறித்த விமர்சனங்களும் அன்றாட செய்திகளாக உருமாறி இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருப்பதை தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டுக் கொண்டிருக்கிறது. எங்கே போனார் ரஜினிகாந்த் என்ற கேள்விகளுக்கு அரசியலை விட்டு விலகி உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் புதிய தகவல்.
புலி வருது புலி வருது என்று கூறிய பொழுது புலி வரவில்லை. ஆனால் புலி வந்த பொழுது பு-லி வருது என்று சொன்னவனை காண மக்கள் வரவில்லை என்ற கதையாக ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. நம்பியவர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த பொ-ழுது எந்த கட்சியில் வேண்டுமென்றாலும் நீங்கள் சேர்ந்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டு அரசியல் ஆட்டத்தை முடித்துக் கொண்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த நிலையிலும் மத்திய அரசு ‘தாதா சாகேப் பால்கே விருது’ மரியாதை செலுத்துகிறது. நல்லவேளை பிழைத்துக்கொண்டார் ரஜினிகாந்த். இனி அரசியல் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டார். இது தான் இன்றைய எதார்த்த நிலை. சிஸ்டம் சரியாகி விட்டது. கஷ்டம் ரசிகர்களுக்கு தான்.
- டெல்லிகுருஜி