பாஜக காங்கிரஸ் கூட்டணி 
மேகலாயாவில்..!


காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதன் பின் காங்கிரஸ் கட்சி மேகலாயாவில் பலகீனம் அடைந்து உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அமைப்புகளும் பலகீனம் அடைந்து வருகிறது. தொடர்ந்து மேகலாயாவில் உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களும் மேகாலாயாவில் தோழமை கொண்டு பாஜக கட்சியை ஆதரிக்க தொடங்கிவிட்டார்கள். 


கடந்த காலங்களில் கோவாவில் புசு சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக பாஜக கட்சியில் தாவிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமிந்திரசிங் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி புதியதாக ஒரு இயக்கத்தை தொடங்கி விட்டார். இப்படி மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் ஒவ்வொன்றாக விலகி சென்று மாநில கட்சிகளுடனும் அகில இந்திய கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்வதும் மாநில கட்சியிலேயே நேரடியாக இணைந்து விடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. 


தமிழகத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர்ஸ் அல்போன்ஸ் அவர்களுக்கு திமுவில் பல கிறிஸ்துவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பதவி வழங்காமல் காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர் என்று வர்ணிக்கப்படுகின்ற பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் சிறுபான்மை கிறிஸ்துவ நல அமைப்பில் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்ற பொழுது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த கோபண்ணா அவர்களுக்கு நூல் நிலையங்களை பராமரிக்கும் வாரிய உறுப்பினர் பதவி வழங்கினார் கலைஞர் அவர்கள். கிறிஸ்துவ சிறுபான்மை ஆணையராக நியமிக்கப்பட்டார். கோபண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.


இப்படி பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் திமுக மறைமுகமாக பல சிபாரிசுகளை செய்து அகில இந்திய தலைமையை தன்வசம் படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் உள்ள காங்கிரஸ் தலைமையை ஒதுக்கி ஓரம் கட்டுவதில் சமார்த்தியமாக செயல்படுகிறது. ஆக இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் காங்கிரஸ் அமைப்பில் ஏற்பட்டால் சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் தயவை நம்பியே கெஞ்சி கூத்தாடி தேர்தல் கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் அகில இந்திய தலைமைக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருவேளை பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே கட்சி ஆட்சியை நோக்கி காங்கிரஸ் அவர்களும் அவர்கள் பின்னால் செல்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதற்கு முன்மாதிரியாக மேகாலயா மாநில காங்கிரஸ் பாஜக கட்சியுடன் இணைந்து செயலாற்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய முடிவு எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை தோற்றுவிக்கக் கூடும். காரணம் அகில இந்திய அளவில் பாஜக கட்சிக்கு மாற்றாக இந்தியா முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இயக்கமாக கடந்த நூறாண்டு மேலாக இருந்து வரும் இயக்கம் காலப்போக்கில் அழிந்துவிட்டால் அல்லது செல்வாக்கை இழந்துவிட்டால் எதிர்கட்சியே இல்லாத ஆட்சி நடைபெறக் கூடும். ஆகவே காங்கிரஸ் கட்சி அழிவது பலகீனம் அடைவது நாட்டுக்கும் நல்லதல்ல. காங்கிரசுக்கும் இது ஆபாத்தை தோற்றுவிக்கும்.


அதே போல் மாற்றுக் கட்சி ஒன்று இல்லையென்றால் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று இரண்டு அமைப்புகள் இல்லையென்றால் ஒரே அமைப்பு, ஒரே கட்சி தொடர்ந்து நாட்டில் இருந்தால் ஜனநாயகமே கேள்வி குறியாகிவிடும். எனவே காங்கிரஸ் கட்சி விழித்துக்கொண்டு மாநிலங்களில் உள்ள நிலவரங்களை கண்காணித்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உள்கட்சி பிரச்சனைகளை தீர்த்துவைத்து உட்கட்சி தேர்தலை நடைமுறைப்படுத்தி கட்சியை வலுப்படுத்தினால் மட்டுமே சு0சு4 ஆம் ஆண்டு மாநில கட்சிகளின் கூட்டணி அமைக்க முடியும். இல்லையென்றால் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயம் தோல்வியை மட்டுமே வெற்றியாக பெறமுடியும்.


- டெல்லிகுருஜி