திராவிட சித்தாந்தத்திலிருந்து தமிழ் சித்தாந்தத்திற்கு மாறும் தமிழகம்!
பெரியார், அண்ணா ஆகியோர் வழிகாட்டுதலில் ஆட்சியை வழிநடத்துவதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இயக்கங்களும் கூறிக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றனர். பு969&க்கு முன்பு பல ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சி அதிகாரத்தை திராவிட கொள்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். சி.என்.அண்ணாதுரை என்பவர் தமிழ்நாட்டு மக்களால் அண்ணா என்று அழைக்கப்படுகிறார். அவரது தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்ற கழகம் திராவிடத்தையும் தமிழையும் ஒன்றாக்கி திராவிடர்களையும் தமிழர்களையும் இணைத்து ஆட்சியை வழிநடத்தினார்கள். அந்த கால கட்டத்தில் மிக குறைந்த அளவே கல்வி அறிவு பெற்றிருந்த தமிழக மக்களை பகுத்தறிவு என்ற போர்வையை போர்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டார்கள். அது மிகப் பெரிய அளவில் வெற்றியை தந்தது. அதனால் அன்று விழுந்த காங்கிரஸ் பேரியக்கம் நூற்றாண்டு கடந்த பின்பும் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அதிமுக, திமுக என்ற இரு ஆளுமைகளும் தொடர்பு வைத்துக் கொண்டு திராவிட கட்சிகள் கொடுப்பதை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு காங்கிரஸை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகின்ற காலகட்டத்தில் தற்போது உள்ளது. படித்துவிட்டு வேலையற்ற இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆரம்ப கல்வி கூடங்கள், இவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தமிழகம் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக மாறிவருகிறது. கடந்த கால வரலாறுகளை திரும்பி பார்க்கும் நேரம் வந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் பேஸ்புக், டிவிட்டர், யூடிப், போன்ற பிரபலமான மின்னணு தகவல் பறிமாற்றத்தினால் அதிக தகவல்களை நேரடியாக தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தமிழகத்தில் வேருன்ற தொடங்கி உள்ளது. இதனால் திராவிட சித்தாந்தம் பெரியார், அண்ணா கொள்கைகள் நீர்த்துப்போகின்ற நிலை உருவெடுத்து உள்ளது. கடவுள் மறுப்பில் தொடங்கிய ஒரு இயக்கம் கடவுளை தேடிச் சென்று வழிபாடு நடத்தும் அளவிற்கு சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு திராவிட சிந்தனைக்கு மிகப் பெரிய அளவில் ஆபத்தையும், இழப்பையும் ஏற்படுத்தும் நிலை தானாகவே உருவெடுத்து உள்ளது. இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் பழைய கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு புதிய கொள்கைகளையும் இணைத்துக் கொண்டு தமிழக மக்களை வழிநடத்தி திராவிடத்தை உயர்த்திப் பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றியை தரும் என்பது போக போகத் தெரியும். தமிழும் திராவிடமும் ஒன்றல்ல. தமிழ் வேறு திராவிடம் வேறு திராவிடத்தை விட தமிழ் உயர்ந்தது. திராவிடர்களை விட தமிழர்களே மேன்மையானர்கள் என்று பிரித்துப் பார்க்கும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். ஆட்சிக்கும், அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தங்கள் சுயமுகவரியை இனியும் இழந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழர் என்ற அடையாளம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் வளர்ந்து வருவதால் வெகுவிரைவில் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு அல்லது உருவாவதற்கு தகுந்த நேரம் ஏற்பட்டுள்ளது என்று இன்றைய இளைஞர்கள் முதியவர்கள் புதிய சிந்தனையில் ஆழ்ந்து உள்ளார்கள். இனியும் நாம் பொறுத்திருந்தால் தமிழினம் அழிந்துவிடும் அதே போல் தமிழ் மொழியும் அழிக்கப்பட்டுவிடும் என்று உணர்ந்து செயல்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. திராவிடனா, தமிழனா என்ற கேள்வி எழும்பொதெல்லாம் தமிழன் என்ற உணர்வே அதிகமாக ஒலிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆகவே திராவிட சித்தாந்த்தை தமிழ் சித்தாந்தம் வெல்லும் என்பது உறுதி.
பிறப்பால் சாதியையும் மொழியால் தமிழையும் தேசப்பற்றால் இந்தியனாகவும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் தமிழனாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் மனதில் நிறுத்திக் கொண்டு ஊழலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு சாதி, மத மோதல்களை தடுத்து நிறுத்துகின்ற வகையில் தேசப்பற்றுடன் ஒன்றிணைந்து புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். என்ற நிலைக்கு தமிழக இளைஞர்கள் தமிழர்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்பதை போக போக புரிந்துக் கொள்ளலாம்.
நேற்று வரை வந்தவர்களை வாழ வைத்தோம். இன்று முதல் சொந்த நாட்டை வளர்த்தெடுப்போம்.
& டெல்லிகுருஜி