வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதுக்கீடு என்பது தற்பொழுது உள்ஒதுக்கீடாக மாறி 20% என்பதிலிருந்து 10.5% தனி உள் ஒதுக்கீடு வழங்கிய சமூக நீதி காவலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் நூற்றுக்கணக்கான சிறு சிறு அமைப்புகளாக இருந்தாலும் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்று போராடி பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கி உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் முதல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்த பெரும்பான்மையான வ சங்கங்கள் பிரதிநிதிகள் அனைவரது கோரிக்கைகளும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இயங்கி வரும் வன்னிய சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி 20% தனி ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் இருந்து தங்கள் கோரிக்கையை கைவிட்டு உள்ஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30% சதவீதமாக பங்கீட்டு அந்த 30 சதவீதத்தில் வன்னியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாக இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு வருகின்ற ஆட்சியாளர்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாட்டினையும் அந்த கோரிக்கையையும் அனைத்து வன்னியர்களும் அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டும் என்றும் துடன் பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் தலைவர் நீதியரசர் எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையின் படி தற்பொழுது 10.5% தற்காலிக ஒதுக்கீடாக அறிவித்து தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் மற்றும் அமைச்சர்களும் பேரூதவி செய்துள்ளார்கள் என்பதை வன்னியர் சமுதாயம் நன்றியுடன் பார்ப்பதோடு அதற்கு பிரதி பலனாக தாங்கள் துணை நிற்போம் என்பதை கூறிக்கொண்டு தர்மம் தலைக் காக்கும் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டும் என்பதை உறுதி கூறுகின்றோம்.
வாழ்த்துக்கள்! பாராட்டுகள்!!
- டெல்லிகுருஜி