காங்கிரசாருக்கு உற்சாகம் தரும் ராகுல்காந்தி!


தமிழ்நாட்டின் மக்கள் மீதும் தமிழர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வருகை தமிழர்கள் வாக்காளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆதரவு அலையை உருவாக்கி வருகிறது. அவரது எளிமையான உரையும், சுறுசுறுப்பான செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் ராகுல்காந்திக்கு ஆதரவு அலை வீசுவதோடு இளைஞர்களின் ஆதரவும் பெருமளவில் ராகுல்காந்திக்கு ஆதரவாக மாறிவருகிறது. திராவிட கட்சிகளுக்கு அதன் தலைவர்கள் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடுவதைப் போல் ராகுல்காந்தி அவர்களுக்கும் கூட்டம் கூடுவது தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏழை மக்களோடு கலந்துரையாடுவதும் அவர்களை கட்டியணைத்து நலம் விசாரிப்பதும் பாமர மக்களோடு அமர்ந்து விருந்து சாப்பிடுவதிலும் ஆர்வம் காட்டும் ராகுல்காந்தி அவர்கள் செயல்பாடுகள் தமிழ் மக்களை வெகுவாக பாராட்டும் அளவிற்கு அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழக சுற்றுப்பயணத்தில் மேற்கொண்டு பட்டி தொட்டிகளிலெல்லாம் சென்று வந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதுடன் தனது வாக்கு வங்கியையும் உயர்த்துவதற்கு பயன்படும் என்பது உறுதி.

ராகுல்காந்தி அவர்களின் வருகையும் அவருக்கு கூடும் கூட்டமும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் வாக்குகளாக மாறும் என்பதில் ஆச்சரியமில்லை .

- டெல்லிகுருஜி