ஜெயலலிதா பிறந்த நாளான பிப்-24ந் தேதி சென்னை தி.நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை கால்நடை பயணமாகவோ அல்லது வாகன வழியாகவோ மிகப் பெரிய பிரமாண்ட பேரணியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று டிடிதினகரனுக்கும் தனது ஆதரவு அதிமுகவினர்களுக்கும் சசிகலா வாய்வழி உத்தரவினை பிறப்பித்து உள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளான 24ந் தேதி சென்னை மாநகரமே சம்மிக்க அளவுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பது சசிகலாவின் விருப்பமாம். முடிந்தால் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு போயஸ்கார்டனுக்கும் சென்று வரவேண்டும் என்பது சசிகலாவின் விருப்பமாக உள்ளதாம். இதற்காக முன்கூட்டி காவல்துறையின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாட்டினை அம்மா மக்கள் முன்னேற்ற நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்களாம். அனுமதி வழங்காத பட்சத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்கின்ற அளவுக்கு கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற அளவுக்கு டிடிதினகரன் உத்தரவு இட்டுள்ளாராம். மீண்டும் முதல்வர் எடப்பாம் மோதுவதற்கு சசிகலா தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த பேரணிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதார்வாளர்களுக்கு அணி திரட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.
முதல்கட்டமாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இரண்டாவது கட்டமாக தன் கணவர் நட்ராஜன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைப்பது இப்படி பல்வேறு திட்டங்களை தயாரித்து அதற்கு ஏற்றவாறு தனது சுற்றுப்பயண விவரங்களை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார் சசிகலா. மத்திய அரசின் ஆதரவை திரட்டுவதற்கும் அதற்கான ஏற்பாட்டினை விரைவாக செயல்வதற்கும் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்கள் மூலம் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதே நேரம் எக்காரணம் கொண்டும் சசிகலாவையோ, டிடிதினகரனையோ கட்சியில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கட்சியில் முக்கிய நிர்வாகிகளிடம் தொண்டர்களிடமும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
- டெல்லிகுருஜி