அமித்ஷா வருகையால் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது! பாஜகவுக்கு 40 இடங்கள்
2020-2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக கட்சி அதிமுக கூட்டணி அமித்ஷா வருகையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று அதிமுக கூட்டணியில் 40 இடங்களில் பாஜக தமிழ்நாட்டில் போட்டியிடுவது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அதிமுகவினர்களுக்கும், பாஜக கட்சியினருக்கும் அரசியல் ஆலோசனைகளை வழங்கி விரைவில் தேர்தல் பணியினை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார் என்கிறார்கள்.
பீகார் தேர்தலிலும் 6 மாதங்களுக்கு முன்பாகவே அமித்ஷா அவர்கள் பீகார் மாநில சுற்றுப்பயணத்தின் போது நிதிஷ்குமாருடன் தேர்தல் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதே பாணியில் தற்போதைய தமிழக சுற்றுப்பயணத்தில் இருக்கும் அமித்ஷா அதிமுக தலைவர்களை சந்தித்து உறுதிப்படுத்தி உள்ளார். 2020-21 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமித்ஷா வருகையால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் டெல்லியில் இருந்து வெளியிடப்படும். ஆகவே 40 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி. இதற்கான பேச்சுவார்த்தையை லீலா பேலஸில் அமித்ஷா சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார். அமித்ஷா அவர்களும் தமிழகத்தில் வருவதும் சகோதர, சகோதரிகளை பார்த்து உரையாடுவதும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
- டெல்லிகுருஜி