மன்னிக்க முடியாத மனிதர்கள்

பசிக்கு உணவு அளிக்கும் உழவனின் வாழ்க்கையில் “சுனாமி சுறுற்றலா” நெஞ்சு பொறுக்கவில்லை நிலைகேட்ட மனிதரை நினைக்கும் பொழுது என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வரிகிறது. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக மனைவி குழந்தைகள் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் தோலிலே ஏர் கலப்பையும், கரங்களில் காளை மாடுகளையும் பற்றிக்கொண்டு வயலை நோக்கி பயணம் செய்து அன்றாடப் பணியை நொடங்குகிறான் ஒரு விவசாயி. ஒரு தேசமும் அதில் வசிக்கும் மனித இனங்களும் பசி பட்டினியால் வாடி விடக் கூடாது என்பதற்காக தன் பசியையும் பொறுப்படுத்தாமல் மனைவியின் கரங்களால் நீராகாரம் நீரை பருகிவிட்டு வயலில் இறங்கி வேர்வை சிந்தி உழைத்து உழைத்து களைப்பு ஏற்பட்டப் பிறகும் மீண்டும் உழைத்து உழைத்து நெல்மணிகளை மற்றும் பல்வேறு வகையான விவசாயப் பொருள்களையும் உற்பத்தி செய்து உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையென்றாலும் தனது களைப்பையும், சோர்வையும் மறந்து சுக துக்கங்களை இழந்து சொல்லனா துயரங்களை தூக்கி எறிந்து உழைப்பில் விளைந்த நெல்மணிகளை விவசாய உற்பத்தி பொருள்களை அந்தி சாய்வதற்குள் சந்தைக்கு கொண்டு வருகிறான் ஒவ்வொரு விவசாயியும் இது இன்றைக்கும் ஒவ்வொரு விவசாயிகளின் வாழ்க்கையிலும் தொடர்கதையாக உள்ளது.


இந்திய பிரதமர் மோடி அவர்கள் எத்தனையோ நல்ல பல திட்டங்களை அறிவித்திருந்தாலும் விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக பிரதமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் கிசான் உதவி திட்டம். அந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளின் வயிற்றுப்பசியை போக்குவதற்கும் வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த அளவு பலனை அளித்தாலும் மிகப் பெரிய அளவில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் மரணத்தை தடுப்பதற்காகவும் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு ஊக்கத் தொகையாகவும் பார்க்கப்பட்டு வந்தது. இத்தகைய மகத்தான ஒரு திட்டத்தை அறிவித்த மத்திய அரசின் நோக்கத்தில் சதி செய்கின்ற அளவில் தரகர்கள் புகுந்து நிலம் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்க வேண்டிய உதவி தொகையை நிலமற்றவர்களுக்கு தட்டிப் பறித்து சுகம் காண நினைத்து ஊழலில் ஊறி திளைத்த சுரண்டல் பேர்வழிகள் போலியான அடையாளங்களை பதிவு செய்து போலி முகவரி தயாரித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து சுமார் 110 கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்ற செய்தி ஊடகத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் ரகசிய எண் களவாடப்பட்டு ரூ.10 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இருந்தே தகவல் வெளியிடப்படுகிறது. இது அவமானகரமான செயல். தமிழ்நாடு அரசிற்கு இது மிகப் பெரிய சரிவை ஏற்படுத்துகின்ற செயலாகவே அமைந்துவிட்டது. மாநில அரசின் வேளாண்மை துறை செயலாளர் மூத்த அதிகாரி எப்பொழுதும் விழித்துக் கொண்டிருப்பவர் ககன்சிங் பேடி. ஆனால் விவசாயிகளு உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழலை கண்டுக்கொள்ளாமல் எவ்வாறு கண்மூடி இருந்தார் என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் ஊழல்வாதிகளை தப்பவிடமாட்டோம் என்ற செய்தி ஆறுதல் அளித்தாலும் ஊழல் செய்த பணத்தை மீட்கின்ற நடவடிக்கையில் வேளாண்மை துறை அரசும், வேளாண்மை துறையும் துரிதமாக செயல்பட்டு திருடப்பட்ட விவசாயிகளின் பணத்தை திரும்ப அரசு கஜனாவிற்கு கொண்டு வருகின்ற பணியை செய்வதன் மூலம் பாராட்டுக்குரியதாக உள்ளது.


அதே நேரத்தில் ஊழல் அதிகாரிகளையும் பொய்யான தகவல்களை தந்து நிலம் இல்லாமல் நகரத்தில் உள்ளவர்களும் படித்தவர்களும் ஊழலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம். விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை தட்டிப் பறித்தவர்களிடம் இருந்த திரும்ப பெற்று உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய தொகையான ரூ.6 ஆயிரத்தை திரும்பவும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என்பது அமைச்சரின் தார்மீக கடமையாகும்.


இனிவரும் காலங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கை மத்திய அரசே நேரடியாக கேட்டுப் பெற்று அதில் களை நீக்கி நேரடியாகவே விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துகின்ற முறையை கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகின்ற விவசாயிகளின் பட்டியல் விவசாயிகள் அல்லாதவர்களை கண்டறிந்து நீக்கம் செய்து நேர்மையான விவசாயிகளுக்கு மட்டுமே பணம் கிடைப்பதற்கு தகுந்த ஏற்பாட்டினை செய்திட வேண்டும் என்பதை அக்னிமலர்கள் வாசகர்கள் சார்பில் வலியுறுத்துகின்றோம்.


ஊழலை ஒழித்து விவவாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்போம் அரசின் நல்ல வழிகாட்டுதல்களை விவசாயிகளிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்போம்.


வயிற்றுக்கு சோறுப் போடும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் காசு ஆசைப் பிடித்த களைகளை அடையாளம் கண்டு பிடுங்கி எரிவோம். நாட்டு மக்கள் பசியாற உணவு அளிப்போம்.