ரஜினிகாந்தின் தவறான அணுகுமுறை !

ரஜினிகாந்தின் தவறான அணுகுமுறை !


ரஜினிகாந்தின் தவறான அணுகுமுறை ! உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வரவேற்க தகுந்தது. அதே நேரம் ஊராட்சி மன்றங்களில் மன்றத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மீண்டும் வேண்டுகோள் விடுப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளூர் மக்களுக்கு அல்லது கிராமத்து மக்களுக்கு தான் வசிக்கும் பகுதியில் நேரடி சேவையில் இடுபடுவதற்கு தகுந்த வாய்ப்பை பெரும்பொழுது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பது 2021 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்று விரும்புவதை இத்தகைய அறிவிப்பு ரஜினிகாந்தை தோல்வியில் தள்ளிவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டு கட்சி சின்னம் இதற்கு அப்பாற்பட்டு நம்பகத்தன்மை அடிப்படையில் நடைபெறுகின்ற தேர்தல் தான் உள்ளாட்சி மன்ற தேர்தல் என்பது. வேறு ஒருவழி மேலும் சொல்லவேண்டும் என்றால் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பை உள்ளடக்கியதும் கூட என்பதை ரஜினி நினைவில் கொள்ளவேண்டும். ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாரா? அல்லது ரசிகர்கள் மீது நம்பிக்கையில்லாமல் ரசிகர்கள் சொந்த செல்வாக்கில் வெற்றிப் பெற கூடாது என்று நினைக்கிறாரா? என்று கேள்வி எழுகிறது. ஆக அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிற ஒருவர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு தொண்டர்களின் உற்சாகத்தை அறிவிப்பது ஞானத்தையும் உற்சாகத்தையும், அரசியல் ஆர்வத்தையும் குறைக்கின்ற செயலாகவே பார்க்கப்படும்.


ரசிகர்களுக்கா தான் ரஜினி இருக்க வேண்டுமே தவிர ரஜினிக்காக ரசிகர்கள் இருக்கவேண்டும் என்று நினைப்பது சர்வ அதிகாரத்தின் உச்சகட்டம். ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்கள் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தேர்தலை புறக்கணியுங்கள் என்று நேரடியாக சொல்லியிருக்கலாம். இதை தவிர்த்து விட்டு தங்கள் வாக்குகளை விரும்புகின்ற வாக்குகளை அளிக்கலாம் என்று கூறவில்லை. அப்படியானால் ரசிகர் மன்ற வாக்குகளை யார் வேண்டுமென்றாலும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று ரஜினி நினைக்கின்றாரா என்று கேள்வி எழுகிறது. மகாத்மா காந்தியின் கூற்றுப்படி பார்த்தால் கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார். அந்த முதுகெலும்பு பலகீனப்படுத்தும் செயலாகவே ரஜினி அறிக்கை விடுகிறாரா. மன்றத்தின் வாக்குகளை எதற்கெடுத்தாக பயன்படுத்த போகிறார். தகுதிவாய்ந்த மன்ற வாக்குகளை என்ன செய்யப்போகிறார்? ஜனநாயக கடமையாற்ற தனது ரசிகர்களுக்கு அனுமதி வழங்க இயலாத ரஜினிகாந்த், முதல்வர் பதவியில் அமர்வதற்கு திட்டமிடுவது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. தமிழன் என்றொறு இனம் உண்டு அவர்களுக்கு என்று தனியே ஒரு குணம் உண்டு என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.